ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் கீழ் ரத்த வெள்ளத்தில் இளைஞர் சடலமாக மீட்பு,*

X
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் கீழ் ரத்த வெள்ளத்தில் இளைஞர் சடலமாக மீட்பு, *கொலையா? அல்லது வேறேதேனும் காரணமான என ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை.. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகராட்சிக்குட்பட்ட புதுமண்டி பகுதியை சேர்ந்த சரவணன் இவருக்கு கலப்பு திருமணம் ஆகி ஒரு மகன் உள்ள நிலையில், இன்று (16) காலை ஆம்பூரில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்ட உயர்மட்ட மேம்பாலத்தின் கீழ் சரவணன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளார், உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் நகர காவல்துறையினர் சரவணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் கொலையா? அல்லது வேறேதேனும் காரணமாக என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர். மேலும் ஆம்பூரில் பரபரப்பாக காணப்படும், பகுதியில் இளைஞர் ரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்க்கப்பட்ட சம்பவம் ஆம்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,
Next Story

