ஒசூர் அருகே குட்கா கடத்தியில் கைது.

ஒசூர்  அருகே குட்கா கடத்தியில் கைது.
X
ஒசூர் அருகே குட்கா கடத்தியில் கைது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகர போலீசார் ராயக்கோட்டை சந்திப்பு சாலை அருகே வாகனச் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், 205 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களான குட்கா இருந்தது தெரியவந்தது. போலீசார் விசாரணையில், பெங்களூரில் இருந்து கிருஷ்ணகிரிக்கு கடத்தி வந்ததும் இதை கடத்தி வந்தவர் விழுப்புரம் மாவட்டம், பெரிய கூளியூர் அருகேயுள்ள கண்ணகாடுவைச் சேர்ந்த வினோத் (35) என்பதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து ரூ. 1 லட்சத்து 33 ஆயிரத்து 46 மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள், மினி லாரியை பறிமுதல் செய்தனர்.
Next Story