சடையம்பாளையம் - பணியின் போது தவறி விழுந்த வடமாநில இளைஞர் உயிரிழப்பு.
சடையம்பாளையம் - பணியின் போது தவறி விழுந்த வடமாநில இளைஞர் உயிரிழப்பு. சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சந்திரகுமார் வயது 38 என்பவர் தற்போது கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட சடையம்பாளையம் பகுதியில் செயல்படும் தனியார் கார்ட்போர்ட் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9: 20 மணியளவில் அந்த நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது டாய்லெட் அருகே சென்ற அவர் கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த அவரது சகோதரர் உக்ராரென் வயது 22 என்பவர் அளித்த புகாரில் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story




