ஆத்தூர் பிரிவு சாலையில் கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது.
ஆத்தூர் பிரிவு சாலையில் கஞ்சாவை பதுக்கி வைத்த இளைஞர் கைது. கரூர் மதுவிலக்கு பிரிவு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு கரூர் அடுத்த ஆத்தூர் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் திங்கட்கிழமை அன்று காலை 11:30 மணி அளவில் ஆத்தூர் பிரிவு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள ஒரு திருமண மண்டபம் அருகே கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது கண்டறிந்து சுமார் 10,550 மதிப்புள்ள 1.150 கிலோகிராம் எடை கொண்ட கஞ்சாவை பறிமுதல் செய்து,இது தொடர்பாக பூலாம்பாளையம் காந்தி நகரை சேர்ந்த மாரிமுத்து மகன் லோகேஸ்வரன் வயது 23 என்பவரை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மதுவிலக்கு காவல்துறையினர்,
Next Story




