கோயம்புத்தூரில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு சேலை, காலை உணவு வழங்கல் !

துப்புரவு பணியாளர்களுக்கு சேலை மற்றும் காலை உணவு வழங்கும் விழா நடைபெற்றது.
கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டுகள் 25, 26, 27 பீளமேடு பயனியர் மில் சாலையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ROTARY CLUB OF COIMBATORE AAKUTHI சார்பில் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களில் 300 பேருக்கு சேலை மற்றும் காலை உணவு வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் மாநகராட்சி மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், 25-ம் வார்டு உறுப்பினர் தவமணி பழனியப்பன், 26-ம் வார்டு உறுப்பினர் சித்ரா வெள்ளியங்கிரி, 27-ம் வார்டு உறுப்பினர் அம்பிகா தனபால், மாநகர மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இரா. தனபால், மதிமுக பகுதி செயலாளர் வெள்ளியங்கிரி, வட்டக் கழக செயலாளர் மாடசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனர்.
Next Story