கோவையில் பரபரப்பு: விளையாட்டு மைதானத்திற்கு பெயர் மாற்றத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு !

பெயர் மாற்றத் தீர்மானத்திற்கு அதிமுக கவுன்சிலர் வெளிநடப்பு –அலுவலகத்தை முற்றுகையிட்ட கட்சியினர்.
கோவை மாவட்டம் சூலூர் பேரூராட்சியில் உள்ள பொன்விழா விளையாட்டு மைதானத்திற்கு முன்னாள் பேரூராட்சி தலைவரின் பெயரை வைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கோஷங்கள் எழுப்பினர். பின்னர் நடைபெற்ற மன்ற கூட்டத்தில், அதிமுக பெண் கவுன்சிலர் சுமதி கார்த்திகேயன் வெளிநடப்பு செய்தார். அவர், “நாட்டின் 50-வது சுதந்திர தினத்தை நினைவுகூறும் வகையில் பெயரிடப்பட்ட மைதானத்தின் பெயரை மாற்றக் கூடாது. மாற்றப்பட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும்,” என்று எச்சரித்தார். இந்த சம்பவம் காரணமாக பேரூராட்சி அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.
Next Story