லைட் ஹவுஸ் கார்னரில் நின்று இருந்த பெண் மீது டூவீலர் மோதி விபத்து.

லைட் ஹவுஸ் கார்னரில் நின்று இருந்த பெண் மீது டூவீலர் மோதி விபத்து.
லைட் ஹவுஸ் கார்னரில் நின்று இருந்த பெண் மீது டூவீலர் மோதி விபத்து. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட படிக்கட்டு துறை பகுதியைச் சேர்ந்தவர் செங்கமலம் மனைவி மல்லிகா வயது 55. இவர் ஞாயிற்றுக்கிழமை அன்று கரூர் லைட் ஹவுஸ் ரவுண்டானா அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது கரூர் சின்னாண்டாங் கோவில் எம் ஜி ஆர் நகரை சேர்ந்த கிரிபிரசாத் வயது 20 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் மல்லிகா மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த மல்லிகாவை கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக மல்லிகா அளித்த புகாரில் விபத்து ஏற்படுத்திய கிரி பிரசாத் மீது கரூர் மாநகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Next Story