டூவீலர் மீது கார் மோதியதில் ஒருவர் பலி, ஒருவர் படுகாயம் , கார் ஓட்டுனர் தலைமறைவு

X
Komarapalayam King 24x7 |16 Sept 2025 7:19 PM ISTகுமாரபாளையத்தில் டூவீலர் மீது கார் மோதியதில் ஒருவர் பலியானதுடன் ஒருவர் படுகாயமடைந்தார். கார் ஓட்டுனர் தலைமறைவானார்.
சேலம் மாவட்டம், வெள்ளார் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன், 45. விவசாய கூலி. இவரது ஊர்க்காரர் குமார், 48. இருவரும் வெப்படை பகுதிக்கு வேலைக்கு வந்து விட்டு, திரும்ப வீட்டுக்கு செல்ல வேண்டி, நேற்றுமுந்தினம் மாலை 03:30 மணியளவில், ஆனந்தன் தனது டி.வி.எஸ். ஹெவி டூட்டி வாகனத்தை ஓட்ட, குமார் பின்னாடி உட்கார்ந்து வந்தார். சேலம் கோவை புறவழிச்சாலை , எக்ஸல் கல்லூரி அருகே சாலையை கடக்கும் போது, அவ்வழியாக வேகமாக வந்த மாருதி ஸ்விப்ட் கார், இவர்கள் வந்த வாகனம் மீது மோதியதில் பலத்த காயமடைந்தனர். இருவரும் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை 06:00 மணியளவில் ஆனந்தன் இறந்தார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற கார் ஓட்டுனர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
