வாங்கல் அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து. இளைஞர் படுகாயம்.
வாங்கல் அருகே டூவீலர் மீது சரக்கு வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து. இளைஞர் படுகாயம். திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே பிடாரமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ் வயது 21. இவர் வேலாயுதம்பாளையம் டி என் பி எல் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை அன்று காலை 7.30 மணி அளவில் மோகனூர் - நாமக்கல் சாலையில் கரூர் மாவட்டம் வாங்கல் அக்ரகாரம் கட்ரோடு அருகே வந்தபோது எதிர் திசையில் வேகமாக வந்த ஒரு சரக்கு வாகனம் சுபாஷ் சந்திரபோஸ் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சுபாஷ் சந்திர போஸின் தந்தை பழனிச்சாமி அளித்த புகாரியில் வாங்கல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story




