ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்தும் பொதுப்பாதையை ஆக்கிரமித்த கடைகளால் பயணிகள் அவதி.

ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்தும் பொதுப்பாதையை ஆக்கிரமித்த கடைகளால் பயணிகள் அவதி.
X
ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் பயணிகள் பயன்படுத்தும் பொதுப்பாதையை ஆக்கிரமித்த கடைகளால் பயணிகள் கிராமத்துக்குள்ளாகி உள்ளனர் அது சம்பந்தப்பட்ட ஜெயங்கொண்டம் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்தனர்.
அரியலூர், செப்.16- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் 20-க்கும் மேற்பட்ட கடைகள் ஏல ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கடை வைத்து நடத்தி வருகின்றனர். இந்த கடையின் உரிமையாளர்கள் பயணிகள் பயன்படுத்தும் பொது பாதையை ஆக்கிரமித்து கடைகளை வைத்து இடையூறு செய்து வருகின்றனர்.இதனால் மழைக்காலங்களில் பயணிகள் அவ்வழியாக செல்ல முடியாமல் கீழே இறங்கி மழையில் நனைந்து செல்லும் சூழல் இருப்பதாலும், இதனால் குழந்தைகள் முதியவர்கள் உள்ளிட்ட பயணிகளுக்கு சிரமம் ஏற்படும் சூழல் இருப்பதாலும் அது சம்பந்தப்பட்ட நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கு. அவர்களுக்கு உரிய இடத்தில் கடைகளை நடத்த அறிவுறுத்துடன், வெளியில் கடையை ஆக்கிரமித்து பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தும் கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்..
Next Story