வெள்ளகோவிலில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

X
வெள்ளகோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரன் மூலனூர் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது புதுப்பை பஸ் நிறுத்தம் அருகில் 3 நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த மூர்த்தி (வயது 48) என்பவரை பிடித்தார். அவர் வெளி மாநில லாட்டரி சீட்டின் கடைசி மூன்று எண்கள் எழுதிய துண்டு சீட்டை ரூ.50-க்கு விற்பனை செய்ததும் குலுக்கல் விவரத்தை ஆன்லைனில் தெரிவித்து வந்ததும் தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story

