தாராபுரத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்

தாராபுரத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம்
X
தாராபுரத்தில் நாளை மின்சாரம் நிறுத்தம். மின்வாரிய செயற்பொறியாளர் கேசவராஜ் தெரிவித்தார்
தாராபுரம் துணை மின் நிலையம் மற்றும் அதன் உயர் அழுத்த மின் பாதையில், மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி தாராபுரம் நகர் பகுதிகள், தாராபுரம் புறநகர் வீராட்சிமங்கலம், நஞ்சியம்பாளையம், வரப்பாளையம், வண்ணாபட்டி பகுதிகள், மடத்துப்பாளையம், உப்பார் அணை, அம்மாபட்டி, பஞ்சப்பட்டி, சின்னக்காம்பாளையம், சின்னப்புத்தூர், கோவிந்தாபுரம், செட்டிபாளையம், உ.ஆலாம்பாளையம், கொண்டரசம்பாளையம், குள்ளகாளிபாளையம், அலங்கியம், மதுக்கம்பாளையம், கண்ணாங்கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. மேற்கண்ட தகவலை, மின்வாரிய செயற்பொறியாளர் கேச வராஜ் தெரிவித்துள்ளார்.
Next Story