புதுகை அருகே பைக் மோதி பரிதாப பலி!

X
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அய்யனார் கோவில் அருகே உள்ள சாலையில் சண்முகம் (72) என்பவர் பைக்கில் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த பாலாஜி (19) மோதியதில் சண்முகம் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து சண்முகம் மகன் ராம்குமார் (29) அளித்த புகாரில் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

