விமான பயணிகளின் சேவை தினம் கொண்டாட்டம்

மதுரை விமான நிலையத்தில் விமான பயணிகள் சேவை தினம் கொண்டாடப்பட்டது
மதுரை விமான நிலையத்தில் விமான பயணிகள் சேவை தினம் இன்று (செப் .17) கொண்டாடப்பட்டது. மதுரை வந்த விமான பயணிகளுக்கு விமான நிலைய இயக்குனர் திலகம் விட்டு வரவேற்றார். பயணிகளை பாரம்பரிய மிக்க பரதநாட்டிய நிகழ்வு மூலம் வரவேற்பு அளிக்கப்பட்டது.செல்பி பாயிண்ட் பகுதியில் ஏராளமான பயணிகள் செல்பி எடுத்து கொண்டனர். மரம் நடும் நிகழ்வு, இரத்த தானம் முகாம், வினாடி வினா, ஓவியப்போட்டி ஆகிய நிகழ்வுகள் நடைபெறுவதால் விமான நிலையம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
Next Story