திருமாநிலையூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை- உதயநிதி ஸ்டாலின்
திருமாநிலையூரில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை- உதயநிதி ஸ்டாலின் கரூரில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்காக நேற்று இரவே கரூருக்கு வந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். இன்று தந்தை பெரியார் 147 வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் திருமாநிலையூரில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் கழக நிர்வாகிகள், பொதுமக்கள், ஆதரவாளர்கள் முன்னிலையில் "சமூக நீதி, சமத்துவம், சுயமரியாதை" என்ற இலக்குகளை முன்னெடுத்து செயல்படுவோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் மாநில.மாவட்ட நிர்வாகிகள், உள்ளூர் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாகமாக வரவேற்பளித்தனர்.
Next Story






