கரூர் -தான்தோன்றி மலைப்பகுதியில் திடீர் மழை. திமுகவினர் கவலை.
கரூர் -தான்தோன்றி மலைப்பகுதியில் திடீர் மழை. திமுகவினர் கவலை. தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களில் இன்று கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவிப்பு செய்தது. ஆனால் இந்த அறிவிப்பில் கரூர் மாவட்டம் குறிப்பிடப்படவில்லை. இந்நிலையில் இன்று காலை11 மணி அளவில் தாந்தோணி மலை பகுதியில் திடீரென மழை பெய்தது. தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டி பகுதியில் இன்று மாலை திமுக சார்பில் முப்பெரும் விழா நடைபெறுகிறது. இதில் தமிழக முதலமைச்சர் கலந்து கொள்ள உள்ளதால் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற வேண்டுமென அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதில் தலைவர்கள் கட்சி நிர்வாகிகள் அமர்வதற்காக 200 க்கு 60 அடி என்ற கணக்கில் மாபெரும் மேடை அமைக்கப்பட்டுள்ளது . அதேசமயம் சுமார் 3 லட்சம் பேர் வரை கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் பங்கேற்க திறந்தவெளியில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. காலையில் பெய்த மழை போல நிகழ்ச்சி நடக்கும்போது பெய்தால் மிகப் பிரமாண்டமாக நடைபெற வேண்டிய முப்பெரும் விழாவில் பின்னடைவு ஏற்படுமே என்று திமுகவினர் கவலை கொண்டுள்ளனர்.
Next Story






