கோவை: அறிஞர் அண்ணா தொழிற்பேட்டை: முதலமைச்சர் காணொலியில் திறப்பு !

கிட்டாம்பாளையத்தில் ரூ.24.61 கோடி செலவில் நவீனமயமாக்கப்பட்ட அறிஞர் அண்ணா தொழிற்பேட்டை திறப்பு.
கோவை மாவட்டம் கிட்டாம்பாளையத்தில் ரூ.24.61 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட்ட அறிஞர் அண்ணா கூட்டுறவு தொழிற்பேட்டையை, தமிழக முதலமைச்சர் அவர்கள் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். 1990ஆம் ஆண்டு 316.04 ஏக்கரில் தொடங்கப்பட்ட இத்தொழிற்பேட்டை, சிட்கோ மூலம் சாலை, பாலம், நீர்த்தேக்கம், கிணறு உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது. இந்த நடவடிக்கை மூலம் 10,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திறப்பு விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர், தொழிற்பேட்டை “தமிழகத்தின் முதல் பசுமைத் தொழிற்பேட்டை”யாக அமையும் என தெரிவித்தார். விழாவில் மாவட்ட கூடுதல் ஆட்சியர், சிட்கோ பொறியாளர்கள், தொழிற்பேட்டை நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Next Story