கரூர் -பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் போக்குவரத்து பாதிப்பு. பொதுமக்கள் அதிருப்தி.

கரூர் -பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் போக்குவரத்து பாதிப்பு. பொதுமக்கள் அதிருப்தி.
கரூர் -பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வில் போக்குவரத்து பாதிப்பு. பொதுமக்கள் அதிருப்தி. தந்தை பெரியார் 147 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக கரூர்- திருமாநிலையூர் பகுதியில் நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியார் முழு உருவ சிலைக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் கட்சி நிர்வாகிகள் பெரியார் திராவிட இயக்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருச்சி-கரூர் சாலையில் முக்கிய வழித்தடமாக திருமாநிலையூர் உள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் மாற்று வழியை முன்கூட்டியே திட்டமிட்டு ஏற்படுத்தாததால் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பேருந்தில் பயணித்த பயணிகளும் இருசக்கர வாகன ஓட்டிகளும் அதிருப்தி தெரிவித்தனர்.
Next Story