கோவை சிபிஓ அலுவலகம் முன் விபத்து : ஆட்டோ டிரைவர் பலி – இரண்டு வாயிற் கதவுகள் திறக்கக் கோரிக்கை !

கோவை சிபிஓ அலுவலகம் முன் விபத்து : ஆட்டோ டிரைவர் பலி – இரண்டு வாயிற் கதவுகள் திறக்கக் கோரிக்கை !
X
சிபிஓ அலுவலகம் முன் பேருந்து-ஆட்டோ மோதல் : ஓட்டுநர் பலி.
கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம் எதிரே தனியார் பேருந்து, ஆட்டோ மீது மோதியதில் ஆட்டோ டிரைவர் பிரேம்குமார் (55) பலியானார். கணபதி பகுதியைச் சேர்ந்த இவர், கலெக்டர் அலுவலகம் சாலையில் இருந்து வந்தபோது, ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து வலப்புறம் திரும்பியதில் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. படுகாயமடைந்த அவர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர்கள், சிபிஓ அலுவலகத்தில் இரண்டு வாயிற் கதவுகள் இருந்தும், ஒன்றை மட்டுமே பயன்படுத்தப்படுவதால் அடிக்கடி விபத்துகள் நடக்கின்றன என்று குற்றம் சாட்டினர். பாதுகாப்பு கருதி இரண்டு கதவுகளையும் திறக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story