கோவை விமான நிலையம் விரிவாக்கம் – யாத்ரி சேவா திவாஸ் விழாவில் அறிவிப்பு !

X
யாத்ரி சேவா திவாஸ் இன்று கோயம்புத்தூர் விமான நிலையத்தில் கொண்டாட படுகிறது. இதையொட்டி பயணிகளுக்கு வரவேற்பு, மரம் நடுதல், கலைநிகழ்ச்சிகள், பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி, ரத்ததானம், கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாக விமான நிலைய பொறுப்பு இயக்குநர் ஜி.சம்பத்குமார் தெரிவித்தார். தினமும் 27 விமானங்கள் மூலம் சுமார் 3,000 பயணிகள் வருவதாகவும், அவர்களுக்கு சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்படுவதாகவும் கூறினார். விமான நிலைய விரிவாக்கம் தொடர்பாக அவர் கூறியதாவது, 605 ஏக்கர் பரப்பளவில் விரிவாக்கம் நடைபெறவுள்ளது. தற்போதைய 2,900 மீட்டர் ஓடுபாதை 3,800 மீட்டராக நீளப்படுத்தப்படும். 18,000 சதுர அடியில் உள்ள தற்போதைய கட்டிடம் 75,000 சதுர அடியாக விரிவுபடுத்தப்படும். சுற்றுசுவர் அமைக்கும் பணிகள் செப்டம்பர் 26-க்குள் முடிக்கப்பட உள்ளது என்றார்.
Next Story

