கோவையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு !

X
சேலத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அரசு அதிகாரிகளும், தி.மு.க. நிர்வாகிகளும் வரவேற்பு அளித்தனர். கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர், தி.மு.க. கட்சியினருடன் சேர்ந்து அவரை வரவேற்றனர். பின்னர் அவர் கார் மூலம் சேலம் புறப்பட்டார்.
Next Story

