ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் பெரியாரின் சமூக நீதி உறுதிமொழி ஏற்பு

ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் பெரியாரின் சமூக நீதி உறுதிமொழி ஏற்பு
X
ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பெரம்பலூர் அரியலூர் மாவட்ட மருத்துவம் ஊரக நலபணிகள் இணை இயக்குநர் டாக்டர் மாரிமுத்து தலைமையில் பெரியார் பிறந்த நாளை ஒட்டி சமூக நீதி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அரியலூர், செப்.17- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் ஒருங்கிணைந்த பெரம்பலூர் அரியலூர் மாவட்ட மருத்துவம் ஊரக நலபணிகள் இணை இயக்குநர் டாக்டர் மாரிமுத்து தலைமையில் பெரியார் பிறந்த நாளை ஒட்டி சமூக நீதி உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் பானுமதி உள்ளிட்ட மருத்துவர்கள் செவிலியர்கள் சமூக நீதி  உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு பொது சுகாதாரம், தூய்மை, நெகிழி பை பயன்படுத்துவதால்  ஏற்படும் விளைவுகள்,  பாலியல் வன்கொடுமை, பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பாலியல் தொந்தரவுகளுக்கு 1098  என்னை அழைப்பது  போன்ற  விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினர்.
Next Story