பாரதப் பிரதமர் பிறந்தநாள் விழா அன்னதானம் வழங்கல்

பாரதப் பிரதமர் மோடியின் பிறந்த நாளை ஒட்டி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75-வது பிறந்த நாளை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ் குமார் அவர்களின் அறிவுறுத்தலின்படி ,பள்ளிபாளையம் பாரதிய ஜனதா கட்சியின் நகர துணை தலைவர் தாமரை ராஜா என்கின்ற பி.சண்முகராஜா அவர்கள் ஏற்பாட்டில் ,அலமேடு பகுதியில் உள்ள ஆனந்த மலர் தொண்டு நிறுவனத்தில் உள்ள குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது . மேலும் காலை உணவு மற்றும் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் ஆகியவை வழங்கப்பட்டது . இந்த நிகழ்வில் நகர நிர்வாகி கார்த்திகேயன், நவீன் மற்றும் கிளைத் தலைவரை A.ரஞ்சிதா உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி பாளையத்தின் பல்வேறு இடங்களில் மோடி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விசேஷ நிகழ்வுகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது....
Next Story