அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தாடைகள்

அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு  புத்தாடைகள்
X
சென்னை தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் விடியல் ஆரம்பம் சார்பாக குமாரபாளையம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது
சென்னை தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் விடியல் ஆரம்பம் சார்பாக குமாரபாளையம் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது. சென்னை தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் விடியல் ஆரம்பம் சார்பாக அரசு பள்ளி மாணவ மாணவிகள் 700க்கும் மேற்பட்டவர்களுக்கு பொதுநல அமைப்பின் நிர்வாகி ஜெயபிரகாஷ் ,விடியல் பிரகாஷ் தலைமையில் புதிய புத்தாடைகளை வழங்கினர். அரசு மேல்நிலைப்பள்ளி குள்ளநாயக்கன்பாளையம், அரசு உயர்நிலைப்பள்ளி, அருவங்காடு, அரசு உயர்நிலைப்பள்ளி வேமன்காட்டுவலசு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, வாசுகி நகர், அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ, நடுநிலைப்பள்ளி மற்றும் நகராட்சி தொடக்கப்பள்ளி, சுந்தரம் காலனி, ஆகிய பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் அனைத்து வணிகர் சங்க தலைவர் காமராஜ், பஞ்சாலை சண்முகம், ஜூவல்லரி செந்தில், ராவ், செந்தில் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story