மனநலம் பாதிக்கப்பட்ட நபர் அவரது அப்பாவை அருவாளால் வெட்டி கொன்ற சம்பவத்தால் பரபரப்பு!

குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த செட்டிகாடு தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் மாயாண்டி(60).இவருக்கு முத்து மாணிக்கம் என்ற மனநலம் பாதிக்கப்பட்ட மகன் ஒருவர் இருந்து வருகிறார்.மகன் முத்துமாணிக்கம்(33) மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த மூன்று வருடங்களாக மதுரையில் உள்ள PEACE என்ற மருத்துவமனையில் மனநலம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். மனநல சிகிச்சையில் இருந்த முத்து மாணிக்கத்தை கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு அவர்களுடைய சொந்த ஊரான செட்டிகாடு தெற்கு கிராமத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.இந்நிலையில் இன்று காலை 11.30 மணியளவில் மகன் முத்துமாணிக்கத்திடம் தந்தை மாயாண்டி மாத்திரைகளை கொடுத்து அதனை போட்டுக் கொள் என்று வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மனநலம் சிகிச்சையில் இருந்த முத்து மாணிக்கம் திடீரென்று அவரது அப்பா மாயாண்டியை அருவாளால் தலைப்பகுதி மற்றும் காது பகுதிகளில் கொடூரமாக வெட்டி உள்ளார்.இதனைப் பார்த்த இறந்த மாயாண்டியின் மனைவி வள்ளி அலறிக்கொண்டு அக்கம் பக்கத்தினரிடம் கூறிய நிலையில் அவர்கள் அறந்தாங்கி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தந்தையை அருவாள் கொண்டு வெட்டிய மகன் முத்துமாணிக்கம் அருவாளை வீசிவிட்டு நடந்து சென்றுள்ளார். அவரை கைது செய்த அறந்தாங்கி காவல்துறையினர் இறந்த மாயாண்டியின் உடலை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்க்காக அனுப்பி வைத்துள்ளனர். மனநலம் பாதிக்கப்பட்ட மகன் தந்தையை அரிவாள் கொண்டு வெட்டி கொன்ற சம்பவம் செட்டிகாடு தெற்கு மற்றும் அறந்தாங்கி பகுதிகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Next Story