இட ஒதுக்கீடு தியாகிகள் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு

இட ஒதுக்கீட்டில் உயிர் நீத்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது
பாட்டாளி மக்கள் கட்சி நாமக்கல் மேற்கு மாவட்டம் பள்ளிபாளையம் நகரத்தின் சார்பாக, செப்டம்பர் 17 இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு பள்ளிபாளையம் நான்கு ரோடு பகுதியில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை தலைவர்களில் ஒருவரான தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது . இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் கே.உமாசங்கர் தலைமை தாங்கினார் . நகர செயலாளர் ராஜா என்கின்ற ராஜசேகர் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட தலைவர் முருகேசன் கலந்து கொண்டார் .முன்னிலை மாநில செயற்குழு உறுப்பினர் எம்.பழனியப்பன் , மாவட்ட துணை செயலாளர் கராத்தே என் சேகர், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ஆர்.சி.முருகேசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சரோஜா, மாவட்ட மாணவரணி தலைவர் ஆர்.செந்தில்நாதன், ஒன்றிய செயலாளர் எஸ்எம்.பி.செல்வா ,தலைவர் பம்பாய் முருகன், கிழக்கு ஒன்றிய தலைவர் இ.எம்.ராஜா ,ஒன்றிய செயலாளர் வெப்படை சந்தோஷ்,வழக்கறிஞர் மகாலிங்கம், பல்டி மாரிமுத்து, குட்டைமுக்கு சங்கர், காளிதாஸ் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிறைவாக நகரத் தலைவர் மெக்கானிக் ராஜா நன்றி உரையாற்றினார்.
Next Story