கோழி திருடும் சிசிடிவி கட்சிகள் பரவல்

X
Komarapalayam King 24x7 |17 Sept 2025 6:37 PM ISTகுமாரபாளையம் பகுதியில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்த நபர் கோழி திருடும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல்.
குமாரபாளையம் அருகே உள்ள ராஜராஜன் நகர் பகுதி சேர்ந்தவர் மூர்த்தி. இவர் தனது வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார் இவரது கோழி கூண்டில் இருந்து சில தினங்களாக கோழிகள் காணாமல் போனது இதன் காரணமாக கோழி திருடனை கண்டுபிடிப்பதற்காக சிசிடிவி கேமராக்களை வீட்டின் வாசலில் பொருத்தி கண்காணித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை கோழி காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்து, தான் பொருத்திய சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த ஒரு மர்ம நபர் தனது கோழி கூண்டினை முதலில் நோட்டமிட்டு செல்வதும், பின்னர் திரும்பி வந்து கோழி கூண்டில் இருந்த கோழி ஒன்றை பிடித்து தனது வேட்டிக்குள் மறைத்து இரண்டு சக்கர வாகனத்தில் செல்வதும் தெரியவந்தது. இதனை அடுத்து அவர் அந்த மர்ம நபர் யார் என கண்டுபிடித்து தரக்கோரி சமூக வலைத்தளங்களில் பரப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
