பரமத்தி வேலூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் ஏ.டி.ஜி.பி. ஆய்வு.

X
Paramathi Velur King 24x7 |17 Sept 2025 6:42 PM ISTபரமத்தி வேலூர் டி.எஸ்.பி அலுவலகத்தில் ஏ.டி.ஜி.பி. ஆய்வு மேற்கொண்டார்.
பரமத்தி வேலூர், செப். 17: பரமத்தி வேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல் துறை இயக்குநர் டேவிட்சன் தேவாசீர்வாதம் செவ்வாய்க்கிழமை மாலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிப்பது, புலன் விசாரணையை மேம்படுத்துவது, பழைய குற்றவாளிக ளைக் கண்காணிப்பது, துரி தமாக செயல்பட்டு பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வது, ஒவ்வொரு வழக்கின் மீதும் உண்மைத்தன்மையை காவலர்கள் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என காவல் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். தொடர்ந்து, காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நட்டு அனைத்து காவல் அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த ஆய்வின்போது, நாமக்கல் மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் விமலா, பரமத்தி வேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கீதா, வேலூர், பரமத்தி, நல்லூர் உள்ளிட்ட காவல் நிலையங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள், உதவி யாளர்கள், போலீஸார் உடன் இருந்தனர்.
Next Story
