நகராட்சி சார்பில் தூய்மையே சேவை மாணவி மாணவர்கள் பேரணி.

X
Komarapalayam King 24x7 |17 Sept 2025 6:44 PM ISTகுமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை எனும் தலைப்பில் அரசு பள்ளி மாணவ - மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது
. குமாரபாளையம் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை எனும் தலைப்பில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்ட தூய்மை பேரணி நிகழ்ச்சி குமாரபாளையம் அருகே உள்ள சின்னப்ப நாயக்கன்பாளையம் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் ரமேஷ் மற்றும் குமாரபாளையம் நகர மன்ற தலைவர் விஜய கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியினை கொடி அசைத்து துவக்கி வைத்தனர். முன்னதாக நகரத்தையும் தன்னை சுற்றியுள்ள பகுதிகளையும் தூய்மையாக வைத்துக் கொள்வதென உறுதிமொழி ஏற்கப்பட்டது. பின்னர் நகரத்தை தூய்மையாக வைத்திருப்பது குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியானது எடப்பாடி முதன்மைச் சாலை, வெள்ளி சந்தை, கலைஞர் நினைவு நூலகம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுற்றி வந்து மீண்டும் பள்ளி வளாகத்திலேயே நிறைவுற்றது. இந்த பேரணியின் போது பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தூய்மை பணியாளர்கள் நகரத்தை தூய்மையாக வைத்திருப்பது குறித்த பதாகைகளை ஏந்தியவாறும், பல்வேறு கோஷங்கள் எழுப்பியவாறும் பேரணியாக நடந்து வந்தனர். இந்த விழிப்புணர்வு பேரணியில் தேசிய மாணவர் படையை சேர்ந்த மாணவர்கள், பசுமை படையை சேர்ந்த மாணவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story
