சமுதாய வளப் பயிற்றுநர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சியர் . தகவல்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சமுதாய மேலாண்மை பயிற்சி மையத்தில் சமுதாய வளப் பயிற்றுநர்களாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது – மாவட்ட ஆட்சியர் . தகவல்.
மக்கள் அமைப்புகளின் திறன் மேம்பாடு தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்திடும் வகையில் சமுதாய மேலாண்மை பயிற்சி மையம் (CMTC) என்ற துணை அமைப்பு மாவட்ட அளவில் செயல்படும் உயர்நிலை கூட்டமைப்பான மக்கள் கற்றல் மையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வமைப்பு, சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு தேவையான திறன் வளர்ப்பு, நிதி உள்ளாக்கம், வாழ்வாதாரம், நிறுவனங்களை வலுப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பு போன்ற சேவைகளை வழங்கிடும் ஒரு உயர்நிலை மக்கள் அமைப்பாகும். மேற்கண்ட சேவைகளை வழங்கிட கீழ்க்கண்ட தகுதிகள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளைச் சார்ந்த சிறப்பாக செயற்பாட்டில் உள்ள 5 வருட அனுபவம் வாய்ந்த சுய உதவிக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்க உறுப்பினர்கள், சமுதாய சுய உதவி குழு பயிற்றுநர்கள் (CST), சமுதாய வள பயிற்றுநர்கள் (CRP) விவசாயம், விவசாயம் சாரா தொழில்கள், சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள்(CBC), தொழிற்சார் சமுதாய வள பயிற்றுநர்கள், வட்டார வள பயிற்றுநர்கள்(BRP), ஒத்த தொழில் குழு (CLG) உறுப்பினர்கள், உற்பத்தியாளர் குழு (PG) உறுப்பினர்களகவும் குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தி அடைந்து பயிற்சி நடத்துவதற்கு தேவையான உடற்தகுதி மற்றும் திறன் உள்ளவராகவும் இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் மாவட்ட, வட்டார மற்றும் ஊராட்சி அளவிலான பயிற்சிகளில் குறைந்தது 5 முதல் 10 பயிற்சிகளில் கலந்து கொண்டிருக்க வேண்டும் மேலும் கைபேசி செயலிகளை பயன்படுத்த தெரிந்தவராகவும், சமுதாய வளப்பயிற்றுநராக செயல்படுவதற்கு குடும்ப ஒத்துழைப்பும் அவசியம். அரசியலில் முக்கிய பொறுப்பில் இல்லாதவர்களாகவும் தனியார் நிறுவனங்களில் முழு நேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ பணிபுரிபவராகவோ இருக்கக் கூடாது. சமுதாய வளப் பயிற்றுநராக விண்ணப்பிக்கும் போது அவர் சார்ந்த சுய உதவிக் குழு வாராக்கடன் நிலுவை இல்லாது இருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பதாரர், தொடர்புடைய குழுவிலிருந்து சமுதாய வளப்பயிற்றுனராக பரிந்துரைக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றி அத்தீர்மான நகலை விண்ணப்பித்துடன் இணைக்கப்பட வேண்டும். சமுதாய வளப் பயிற்றுநர்களாக தேர்வு செய்யப்படுவோருக்கு தர மதிப்பீட்டின் அடிப்படையில் நாள் ஒன்றுக்கு மதிப்பூதியமாக ரூ.350 முதல் ரூ.750 வரை வழங்கப்படும். தொடர்பான விண்ணப்ப படிவம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அலுவலகத்திலோ அல்லது https://drive.google.com/drive/folders/1wjSzI2VyM2nCCK9Hdwr0KBghyyG6FNSU?usp=sharing என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து 17.09.2025 அன்று மாலை 5 மணிக்குள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு திட்ட இயக்குனர் / இணை இயக்குநர் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியராகம் கூடுதல் வளாக இரண்டாம் தளம் நாமக்கல் அல்லது மேலாளர், மாவட்ட மகமை, சமுதாய கூடம் அருகில், பொன்விழா நகர், வகுரம்பட்டி(அ), நாமக்கல் – 637001 முகவரி மற்றும் 9789572877 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Next Story