பாலக்காடு- திருச்செந்தூர் விரைவு ரயில் பகுதியாக ரத்து!

X
பாலக்காடு-திருச்செந்தூர் விரைவு ரயில் நாளை (17ம் தேதி) புதன்கிழமை விருதுநகர்-திருச்செந்தூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதுகுறித்து தென்னக ரயில்வே மதுரை மண்டலம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "கோவில்பட்டி- கடம்பூர் ரயில் நிலையங்கள் இடையே தற்போதுள்ள லெவல் கிராசிங் அகற்றப்பட்டு, அந்த பகுதியில் புதிய சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளன. இதனால் ரயில் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அதன்படி நாளை 17ம் தேதி புதன்கிழமையன்று பாலக்காடு - திருச்செந்தூர் விரைவு ரயில் வண்டி எண் 16731 மற்றும் திருச்செந்தூர் - பாலக்காடு விரைவு ரயில் வண்டி எண் 16732 ஆகிய இரண்டு ரயில்களும் விருதுநகர் - திருச்செந்தூர் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இதே போன்று நாளை 17ம் தேதி இயக்கப்படும் திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி விரைவு ரயில் வண்டி எண் 22628 திருவனந்தபுரத்தில் இருந்து மதியம் 12.00 மணிக்கு 25 நிமிடங்கள் கால தாமதமாக புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story

