பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் ராசிபுரம், புதுச்சத்திரம்,வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளில் சிறப்பாக கொண்டாடினர்..

X
Rasipuram King 24x7 |17 Sept 2025 8:39 PM ISTபாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் ராசிபுரம், புதுச்சத்திரம்,வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளில் சிறப்பாக கொண்டாடினர்..
உலக அளவில் பாரதத்தின் பெருமையை உயர்த்தியவர் பிரதமர் திரு. நரேந்திர மோடி என்றும் வளர்ச்சி அடைந்த பாரதம் என்பதை இலக்காகக் கொண்டு மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முனைப்போடு செயல்படுத்தி வருகிறது என்றும் பாஜக மாநில துணைத் தலைவர் டாக்டர் K.P. இராமலிங்கம் கூறியுள்ளார்.. பாரத பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், புதுச்சத்திரம்,வெண்ணந்தூர் ஆகிய பகுதிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் மருத்துவ முகாம்கள் நடைபெற்றன. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் கோனேரி பட்டி பகுதியில் ராசிபுரம் நகர பாஜக சார்பில் நகர தலைவர் வேலு தலைமையில் அலங்கரித்து வைக்க பட்ட பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் படத்திற்கு முன்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். தொடர்ந்து, வெண்ணந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் K.P. இராமலிங்கம், அவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். தொடர்ந்து, பாஜக புதுச்சத்திரம் ஒன்றியம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தூய்மை பணியாளர்களுக்கு வேட்டி, சேலைகள், பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு-புத்தகங்கள் வழங்கப்பட்டன. மாற்றுத்திறனாளி மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் K.P. இராமலிங்கம், உலகம் முழுவதும் இந்தியாவின் பெருமையையும் பண்பாட்டையும் வலிமையும் கொண்டு சேர்க்கின்ற ஒரே பிரதமராக திரு. நரேந்திர மோடி திகழ்கிறார். வலிமையான பிரதமரைக் கொண்டு உலக மத்தியில் பாரதத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்திய மக்களுக்கு மரியாதையை ஏற்படுத்தித் தந்துள்ள வரலாற்றுத் தலைவருக்கு பிறந்தநாள் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சரக்கு - சேவை வரி இதுவரை இல்லாத அளவிற்கு குறைத்து, ஒட்டுமொத்த தேசத்திற்கும் சுதேசி இயக்கத்தை பரவச் செய்தவர் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார். இதன்மூலம் உள்ளூர் பொருட்களின் விற்பனை அதிகரிக்கும். மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் இன்னும் மேம்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். அதேபோல வளர்ச்சி அடைந்த பாரதம் 20047 என்பதை இலக்காக கொண்டு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மத்திய அரசு திறம்பட செயல்படுத்தி வருகிறது. தாய்மார்களின் நலத்தை முன்னிறுத்தி ஆரோக்கியமான பெண்கள் வலிமையான குடும்பம் இயக்கம் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் சுகாதாரத் துறையில் பெண்களுக்கு இன்னும் மேலதிக சேவைகள் கிடைக்கும். பிரதமர் திரு. நரேந்திர மோடி, பல ஆண்டுகள் நிறை ஆயுளுடன் நலமாக வாழ்ந்து நமது நாட்டை வழி நடத்துவார் என்றும் கே.பி. இராமலிங்கம் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிகளில், ராசிபுரம் நகர தலைவர் வேலு, பாஜக புதுச்சத்திரம் ஒன்றிய தலைவர் S.S. செல்வம், வெண்ணந்தூர் ஒன்றிய தலைவர் S. திவ்யா சிவக்குமார், R.P. தமிழரசு, கந்தசாமி, தனலட்சுமி, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
Next Story
