விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூகநீதி உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

X
Rasipuram King 24x7 |17 Sept 2025 8:57 PM ISTவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூகநீதி உறுதிமொழி ஏற்பு நிகழ்வு
ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர் பேரூர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூகநீதி உறுதிமொழி ஏற்பு நிகழ்வு புதன்கிழமை நடைபெற்றது. நாமக்கல் கிழக்கு மாவட்டம் வெண்ணந்தூர் பேரூர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், வெண்ணந்தூர் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தந்தை பெரியாரின் பிறந்த தினவிழா நடைபெற்றது. வெண்ணந்தூர் பேரூர் செயலாளர் க.நடராஜன்( எ)நாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதே போல் மாவீரன் மலைச்சாமி, இரட்டைமலை சீனிவாசன் ஆகியோர் நினைவு தின நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் சமூக நீதி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் விசிக சேலம்-நாமக்கல் மண்டல துணை செயலாளர் வ.அரசன், கட்சியின் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் இரா.கபிலன், வணிகர் அணி மாநில துணை செயலாளர் பெ.செங்குட்டுவன், பேரூராட்சி மன்றத்தின் துணைத் தலைவர் பட்டு மாதேஸ்வரன் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
Next Story
