தா.பழூரில் தந்தை பெரியாரின் திரு உருவ சிலைக்கு ஜெயங்கொண்டம் எம்எல்ஏ க.சொ.க.கண்ணன் வழிகாட்டுதலின் பேரில் திமுக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை.

X
அரியலூர் செப்.17- ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி,தா.பழூர் கிழக்கு ஒன்றிய திமுக சார்பில்,பகுத்தறிவுப் பகலவன் , சுயமரியாதைச் சுடர், தந்தை பெரியார் அவர்களின் 147 - வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு, தா.பழூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர்,சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் அவர்களின் வழிகாட்டுதலின்படி,தா.பழூர் கிழக்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் தந்தை பெரியார் அவர்களின் முழு திருவுருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,சமூக நீதி நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் தா.பழூர் திராவிடர் கழக ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன்,திமுக அவைத்தலைவர் எஸ்.சூசைராஜ், ஒன்றிய துணை செயலாளர் அ.இராஜேந்திரன்,மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் ந.கார்த்திகைகுமரன்,அ.தங்கபிரகாசம், க.நளராசன்,மருத்துவர் மா.சங்கர், எழிலரசி அர்ச்சுனன்,நீல.மகாலிங்கம்,தா.பழூர் நகர செயலாளர் கண்ணன் மற்றும் கழக தோழர்கள்,திக தோழர்கள் கலந்துகொண்டனர்.
Next Story

