ஆரணியில் இடஒதுக்கீட்டிற்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு பாமக சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி.

வன்னியர்களின் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு ஆரணி பழைய பஸ்நிலையம், எம்ஜிஆர் சிலை அருகில் புதன்கிழமை பாமகவினர் இரு பிரிவாக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
வன்னியர்களின் இடஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு ஆரணி பழைய பஸ்நிலையம், எம்ஜிஆர் சிலை அருகில் புதன்கிழமை பாமகவினர் இரு பிரிவாக மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அன்புமணிராமதாஸ் தலைமையாகக் கொண்ட பாமக சேர்ந்த முன்னாள் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் ஆ.குமார் தலைமையில் இட ஒதுக்கீட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். சிறப்பு விருந்தினராக மாவட்ட செயலாளர் ஆ.வேலாயுதம் கலந்து கொண்டு வன்னியர்களுக்கு இட ஒதுக்கிட்டு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளை குறித்து பேசினார். அனைவரையும் வன்னியர் சங்க நகர செயலாளர் இரா.ராஜாமணி வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் அரியப்பாடி பிச்சாண்டி, மாவட்ட துணைச் செயலாளர் து.வடிவேல், மாவட்ட துணைத் தலைவர் மெய்யழகன், மாவட்ட நிர்வாகி எம்.வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் நகர செயலாளர்கள் சு.இரவிச்சந்திரன், ந.சதீஷ்குமார், ஒன்றிய செயலாளர்கள் அக்கூர் பெருமாள், ஸ்ரீ அஜித்குமார், மு.பெருமாள், அண்ணாமலை, தினேஷ், சுரேஷ், மாவட்ட இளைஞரணி தலைவர் அருள்பிரகாசம், ஒன்றிய தலைவர்கள் ஏ.ஏழுமலை, சேவூர் பாபு, மாவட்ட துணை தலைவர் ராமு, உழவர் பேரிக்க மாவட்ட தலைவர் தாமோதரன், மாவட்ட தொண்டர் அணி செயலாளர் நடிகர் ஹரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும் இராமதாஸ் தலைமையாகக்கொண்ட பாமக சேர்ந்த வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் அ.கருணாகரன் தலைமையில் இடஒதுக்கீட்டிற்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.இதில் மாவட்ட அமைப்புச் செயலாளர் ஏ.கே.ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் கு.சிவா, வன்னியர் சங்க மாவட்ட துணை செயலாளர் ஆ.சரவணன், நகர வன்னியர் சங்க செயலாளர் பி.குமார், பேராசிரியர் கே.சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இதில் மாவட்ட பொறுப்பாளர் சங்கர், ஒன்றிய செயலாளர்கள் ஹரி, சுகுமார், சரத், சக்தி மற்றும் நிர்வாகிகள் பாலா, விஸ்வா, தினேஷ், வி.எஸ்.வெங்கடேசன், சேட்டு, பிரபாகரன், மலைகோவிந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story