கிருஷ்ணகிரி அருகேசண்முகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை.

கிருஷ்ணகிரி அருகேசண்முகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை.
X
கிருஷ்ணகிரி அருகே சண்முகநாதர் கோவிலில் சிறப்பு பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம் செட்டிமாரம்பட்டி அருகேயுள்ள கிருஷ்ணன் கொட்டாய் பகுதியில் உள்ள மலை குன்றின் மேல் குமரகிரி மலை சண்முகநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபி ஷேக வருடாந்திர விழாவை ஒட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பல்வேறு யாக பூஜைகள் நடந்த பக்தர்கள் மேளதாளத்துடன் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் சாமிக்கு பாலாபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story