காங்கேயம் அருகே மனைவியை கட்டையால் அடித்து கொன்று விட்டு தப்பி ஓடிய வடமாநில கணவன் - போலீசார் தீவிர விசாரணை

X
மேற்கு வங்காளம் சர்ஜில்லா பகுதியைச் சேர்ந்தவர் கௌரங்க மண்டல் 37, மனைவி ரிங்கு மண்டல் 31 ஆகியோர் காங்கேயம் முத்தூர் ரோடு படியாண்டிபாளையம் அருகே உள்ள கணேஷ் நகரின் எதிரே உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் தங்கிக் கொண்டு வீடு கட்டும் வேலையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் கணவன் மனைவி இடையே நேற்று இரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து காலை வேலைக்கு செல்லும் போது ரூமின் கதவு திறந்து இருந்தது என்று அருகே குடியிருந்தவர்கள் பார்த்தபோது கெளரங்க மண்டல் சடலமாக கிடந்துள்ளார். இதை அடுத்து காங்கேயம் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் அர்பிதா ராஜ்புட் IPS மற்றும் காங்கேயம் காவல் ஆய்வாளர் செல்வநாயகம் ஆகியோர் தலைமையில் கைரேகை நிபுணர்கள், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்டு சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் மனைவியை கொன்று விட்டு தப்பி ஓடிய கணவனை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இவர்கள் இருவருக்கும் 14 வயதில் ஒரு மகன் உள்ளதாக உடன் பணிபுரியும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். காங்கேயம் அருகே கணவனே மனைவியை கொன்றுவிட்டு தப்பி ஓடியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story

