மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இடங்களில் ஏற்பட்ட விபத்து

மதுராந்தகம் அருகே  தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இடங்களில் ஏற்பட்ட விபத்து
X
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இடங்களில் ஏற்பட்ட விபத்தினால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்.
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மூன்று இடங்களில் ஏற்பட்ட விபத்தினால் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல். செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் அடுத்த அத்திமனம் என்ற இடத்தில் கண்டெய்னர் லாரி யூ டர்ன் அடிக்க முயன்ற போது மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற தனியார் சொகுசு பேருந்து கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தனியார் சொகுசு பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டில் இருந்து சாலை ஓரத்தில் சொகுசு பேருந்து இறங்கி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் சொகுசு பேருந்து ஓட்டுநர் மற்றும் கண்டெய்னர் லாரி ஓட்டுனர் ஆகிய இருவர் காயமடைந்தனர். இவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த போக்குவரத்து நெரிசலில் கண்டெய்னர் லாரி தனியார் பேருந்து கல்குவாரி லாரி என அடுத்தடுத்து வாகனங்களும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த இரு விபத்துக்கள் குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மதுராந்தகம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கள்ளபிரான்புரம் என்ற இடத்தில் திருச்சியிலிருந்து சென்னை நோக்கி மீன்களை ஏற்றிச் சென்ற மினி லாரி முன்னாள் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் மினி லாரி ஓட்டுநர் முகிலன் வண்டியில் சிக்கிக்கொண்டார்.இவரை மதுராந்தகம் தீயணைப்பு துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் விபத்தானது ஏற்பட்டதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கிறது. குறிப்பாக காலை நேரத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக அதிகப்படியான வாகனங்கள் சென்னை நோக்கி செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசலில் வாகன ஓட்டிகள் சிக்கி தவித்து வருகின்றனர்.
Next Story