கோவில்பட்டி அருகே கல்குவாரி நீரில் மூழ்கி சலவைத் தொழிலாளி உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே கல்குவாரி நீரில் மூழ்கி சலவைத் தொழிலாளி உயிரிழப்பு
X
கோவில்பட்டி அருகே கல்குவாரி நீரில் மூழ்கி சலவைத் தொழிலாளி உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அகிலாண்டபுரம் கிராமத்தினை சேர்ந்த வீரபெருமாள் என்பவரின் மகன் குருசாமி வயது (35), சலவை தொழிலாளியான இவர் சற்று மனநலம் பாதித்தவர் என்று கூறப்படுகிறது .நேற்று மாலையில் வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.ஆனால் அவர் வீடு திரும்பவில்லை, அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களிலும் தேடிப் பார்த்துள்ளனர் ஆனால் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று ஊருக்கு மேற்கே பயனற்ற கல்குவாரி அருகே குருசாமியின் வேஷ்டி, சட்டை மற்றும் செருப்பு கிடந்ததாக கூறப்படுகிறது. ஒருவேளை குளிர்க்க சென்று கல்குவாரியில் மூழ்கி இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் கயத்தாறு காவல் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து கோவில்பட்டி மற்றும் கழுகுமலை என இரண்டு தீயணைப்பு நிலையத்திலிருந்து வாகனங்கள் வந்து கல்குவாரியில் குருசாமியை தேட ஆரம்பித்தனர் . நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் குருசாமியின் சடலத்தை மீட்டனர். உடல் மீட்கப்பட்டு உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கயத்தாறு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளிக்கப் போகும்போது தவறி விழுந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story