மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமான பணியை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு

மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமான பணியை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
X
மாவட்ட விளையாட்டு வளாக கட்டுமான பணியை விரைந்து முடிக்க கலெக்டர் உத்தரவு
செங்கல்பட்டு மாவட்ட தலைநகரில், விளையாட்டு வளாகம் இல்லாமல் இளைஞர்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனால், மாவட்ட விளையாட்டு வளாகம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து, செங்கல்பட்டு அடுத்த மலையடி வெண்பாக்கம் கிராமத்தில், செங்கல்பட்டு மாவட்ட புதிய விளையாட்டு வளாகம் அமைக்க, 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. அதன் பின், இந்த விளையாட்டு வளாகம் கட்ட, 15 கோடி ரூபாய் நிதியை, அரசு ஒதுக்கியது. இங்கு விளையாட்டு அரங்கம், உள் விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம், ஓடுதளம் ஆகியவை அமைகின்றன.இப்பணிக்கு டெண்டர் விடப்பட்டு, கடந்தாண்டு மார்ச் 14ம் தேதி பணிகள் துவங்கின. அதன் பின், விளையாட்டு வளாக பகுதியில் சுற்றுச்சுவர், அரங்கம், குளம் உள்ளிட்டவை கட்டும் பணிகள், மந்தமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் முடிந்து, கடந்த ஜூன் மாதம் விளையாட்டு வளாகம் பயன்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், பணிகள் முடியவில்லை. இந்நிலையில், விளையாட்டு வளாகம் அமைக்கும் பணியை, மாவட்ட கலெக்டர் சினேகா, நேற்று ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பின், பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Next Story