சூடனுரில் தூய்மை சேவை உறுதி மொழி ஏற்பு
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தொகுதி மற்றும் ஒன்றியத்துக்கு உட்பட்ட சூடனூர் ஊராட்சியில் இன்று வியாழக்கிழமை தூய்மை பணி தளத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் அனைவரும் "தூய்மையே சேவை” என்ற விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். தூய்மை மற்றும் சுகாதாரத்தின் அவசியத்தை உணர்த்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஊராட்சி செயலாளர், மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்கள் பங்கேற்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்
Next Story



