கோவை சூலூரில் பாரதியா மஸ்தூர் சங்கம் சார்பில் தேசிய தொழிலாளர் தினம் கொண்டாட்டம் !
கோவை மாவட்டம் சூலூர் தாலுகா வதம்பச்சேரி பகுதியில் பாரதியா மஸ்தூர் சங்கம் சார்பில் தேசிய தொழிலாளர் தினம் (விஸ்வகர்மா ஜெயந்தி) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு பாரதிய தமிழக கைத்தறி பேரவை மாநில தலைவர் திரு. ஏ. நடராஜன் தலைமையேற்றார். கோவை மண்டல கைத்தறி நெசவு தொழிலாளர் சங்க தலைவர் திரு. ஆர். சந்திரசேகர், பொருளாளர் திரு. லோகநாதன் உள்ளிட்ட மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்துரைகள் வழங்கினர். தொழிலாளர்களின் உரிமைகள், நலத்திட்டங்கள், தொழில்துறை வளர்ச்சி குறித்து இந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story



