கோவை விமான நிலையத்தில் பயணிகள் சேவை திருவிழா தொடக்கம் !
கோவை விமான நிலையத்தில், இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) சார்பில் “பயணிகள் சேவை திருவிழா” நேற்று தொடங்கியது. விமான நிலைய இயக்குநர் (பொறுப்பு) சம்பத்குமார் விழாவைத் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவை முன்னிட்டு பட்டுகாஸ் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டு, பயணிகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் கல்லூரி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், மரக்கன்று நடுதல், மருத்துவ பரிசோதனை முகாம், ரத்ததான முகாம் ஆகியவை நடைபெற்றன. அதேபோல் அரசு பள்ளி மாணவர்களுக்கு விமானத் துறையில் உள்ள வேலை வாய்ப்புகள் குறித்து வல்லுநர்கள் கலந்துரையாடலில் ஆலோசனை வழங்கினர்.
Next Story



