இலுப்புலியில் உண்ணாவிரத போராட்டம்

திருச்செங்கோடு அருகே உள்ள இலுப்புலி ஊராட்சி மோளாக்காடு பகுதியில் பொதுத்தடத்தில் கற்களை கொட்டி வைத்து அடாவடியில் ஈடுபட்டுள்ள ஒருவர் மீது நடவடிக்கை எடுக்காத வருவாய் துறை காவல் துறையை கண்டித்து பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
இலுப்புலி கிராமத்தில் பொதுத்தடத்தில் பாறாங்கற்களை போட்டு வைத்து அடாவடி. புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத காவல்துறை வருவாய் துறை அலுவலர்களை கண்டித்து கிராம மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் இலுப்புலி ஊராட்சி மோளாக்காடு பகுதியில்குமார் என்பவர் அனுமதி இன்றி அதிக சக்தி வாய்ந்த வெடி பொருட்களை வைத்து கிணறு தோண்டியதை கண்டித்தும், தோண்டப்பட்ட கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட கற்களை 15 பேருக்குசொந்தமான பொது வழித்தடத்தில் கொட்டி வைத்திருப்பதை கண்டித்தும் இதன் பேரில் நடவடிக்கை எடுக்காத கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரை கண்டித்து மோளாக் காடு கிராம மக்கள் 20 பெண்கள் உட்பட 35 பேர உண்ணாவிரதப் போராட்டத்தில்ஈடுபட்டனர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எலச்சிபாளையம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் கூறியதாவது திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையம் ஒன்றியம் இலுப்புலி ஊராட்சி மோளாக்காடு பகுதியில்குமார் என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தில் கிணறு தோண்டியுள்ளார்.கிணறு தோண்டும் போது பாறைகளை அகற்ற சக்தி வாய்ந்த வெடிபொருட்களை பயன்படுத்தி உள்ளார். கிணறு தோண்டவோ அல்லது சக்தி உள்ள வெடிபொருட்களை பயன்படுத்தவோ உரிய அனுமதி பெறாமல் வெடி வைத்து தகர்த்து பாறைகளை அகற்றியுள்ளார். இதனால் சிதறிய கற்கள் கிராம மக்கள் மற்றும் குழந்தைகள் மீது விழுந்துள்ளது. மேலும் வீடுகளில் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர், வருவாய் அலுவலர் தாசில்கார், ஆகியோரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப் படவில்லை.மேலும் கிணற்றிலிருந்து அகற்றப்பட்ட பாறை கற்களை 15 பேருக்கு பொதுவான வழித்தடத்தில் போட்டு வைத்துள்ளார். இதனால் மற்ற 14 பேரும் தங்களது விவசாய நிலத்திற்கு தேவையான பொருட்களை அல்லது விவசாய வேலைக்கு தேவையான பொருள்களை கொண்டு செல்ல நான்கு சக்கர வாகனங்களையோ இருசக்கர வாகனங்களையோஎடுத்துச் செல்ல முடியவில்லை. நடந்து செல்ல கூட வழியில்லாமல் உள்ளது. இதுகுறித்து எலச்சிபாளையம் காவல் நிலையத்தில் பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டு குமாரை அழைத்து பேசிய போலீசார் 10 நாட்களுக்குள் கற்களை அகற்றி விடுவதாக குமார் கூறியதை ஏற்று எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளனர். அந்த காலக்கெடு முடிந்ததற்குப் பிறகும் குமார் கற்களை அகற்றாமல் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறார். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய வருவாய் துறை அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் வருவாய் ஆய்வாளர் தாசில்தார் ஆகியோர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்களிடம் எழுதிக் கொடுத்தபடி கற்களை அகற்றாத குமார் மீது காவல் துறையினரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இதனை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என கூறினார். இந்த உண்ணாவிரத போராட்டத்தில் 20 பெண்கள் உட்பட 35 பேர் கலந்து கொண்டனர் போராட்டத்திற்கு பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றால் வேறு வகையான போராட்டங்களில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்
Next Story