பிரதமர் பிறந்தநாளுக்கு பாஜகவின் பரிசு: சட்டப்பேரவையில் இரட்டை இலக்க எம்எல்ஏக்கள் – வானதி சீனிவாசன்

கோவையில் பெண்களுக்கான மருத்துவ முகாம் – செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என பாஜக தகவல்.
கோவை புலியகுளத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் பெண்களுக்கான மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை பாஜக தேசிய மகளிரணி தலைவர் மற்றும் கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக சட்டப்பேரவையில் வரலாற்றில் முதல் முறையாக பாஜகவினர் இரட்டை இலக்க எண்களில் நுழைவார்கள், அதுவே பிரதமருக்கு வழங்கப்படும் பிறந்தநாள் பரிசு என தெரிவித்தார். பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை ரத்த தானம், மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, ‘மோடியின் தொழில் மகள்’ போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன என்றும் கூறினார். இந்நிகழ்ச்சிகளில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
Next Story