கோவை காந்திபுரத்தில் பெரியார் பிறந்தநாளில் பீப் பிரியாணி விருந்து!

கோவை காந்திபுரத்தில் பெரியார் பிறந்தநாளில் பீப் பிரியாணி விருந்து!
X
உணவில் பாகுபாடு இல்லை எனச் சுட்டிக்காட்டிய பீப் பிரியாணி விருந்து.
கோவை காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில், தந்தை பெரியார் 147வது பிறந்தநாளை முன்னிட்டு "கரப்பான் பூச்சி" யூடியூப் குழுவினர் சார்பில் பீப் பிரியாணி, பீப் பப்ஸ், பீப் கிரேவி உள்ளிட்ட விருந்து வழங்கப்பட்டது. தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு. ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கும் இடதுசாரி மற்றும் முற்போக்கு அமைப்பினருக்கும் உணவுகளை வழங்கினார். ஆண்டுதோறும் உணவில் பாகுபாடு காட்டக் கூடாது என்பதையும், பீப் உணவுகள் பொதுவாக ஏற்றுக்கொள்ளக்கூடியவை என்பதையும் வலியுறுத்தும் நோக்கில் இந்த விருந்து நடத்தப்படுவது ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
Next Story