மரத்தில் துாக்கிட்டு இறந்த ஒடிஷா மாநில வாலிபர்

மரத்தில் துாக்கிட்டு இறந்த ஒடிஷா மாநில வாலிபர்
X
பொத்தேரி ஏரிக்கரையில், மரத்தில் துாக்கிட்டு இறந்த ஒடிஷா மாநில வாலிபர்
மறைமலை நகர் அடுத்த பொத்தேரி ஏரிக்கரை அருகிலுள்ள ஒரு மரத்தில், துாக்கில் தொங்கிய நிலையில் வடமாநில நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக, மறைமலை நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், அந்த உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் விசாரித்ததில், இறந்த நபர் ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த ஜித்து ஜானி, 24, என்பதும், பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம்., பல்கலை வளாகத்தில், கடந்த ஆறு மாதங்களாக கட்டட வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. அவரது நண்பர்களிடம் நடத்திய விசாரணையில், நேற்று முன்தினம் இரவு ஜித்து ஜானி, தன் காதலியிடம் பேசி விட்டு, தனிமையில் இருந்து வந்தது தெரிந்தது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிந்து, போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்
Next Story