இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாள் அனுசரிப்பு

X
விடுதலைப் போராட்ட வீரர் மாவீரன் தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு கோழியளம் உரிமை களத்தில் திருஉருவப்பட சிலைக்கு மாலை அணிவித்து விசிகவினர் மரியாதை செலுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் அடுத்த சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரர் தாத்தா ரெட்டமலை சீனிவாசனார் அவர்களின் பிறந்த ஊரான. கோழியாளம் கிராமத்தில் அவரது திருவுருச்சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒன்றிய செயலாளர் மொறபாக்கம் தயாநிதி அவர்களின் தலைமையில்,மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மேனாள் மாவட்ட செயலாளர் சூ.க. ஆதவன்,முன்னாள் துணைப் பொதுச் செயலாளர் சூ.க.விடுதலைச் செழியன் தெற்கு மாவட்ட செயலாளர் காஞ்சி தமிழனி, தாம்பரம் மாநகர மாவட்ட செயலாளர் எபினேசர் என்கிற சாமுவேல், மாவட்ட பொருளாளர் கலைகதிரவன், மாவட்ட துணைச் செயலாளர் விஜயகுமார், மாநிலத் துணைச் செயலாளர் எல் உதயகுமார்,ஆசிரியர் மூர்த்தி ஒன்றிய செயலாளர்கள் வடபாதி முகிலன், கதிர்வாணன்,பன்னீர்செல்வம், கார்வேந்தன், நகர செயலாளர் கிட்டு பிரபாகரன், மற்ற மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள், தலித் ஏழுமலை, தினகரன்,மகாதேவன், தலித் ராஜன், மகளிர் அணியின் திலகவதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்
Next Story

