தமிழ்நாடு கால்பந்தாட்ட அணிக்கு காயல்பட்டினம் பள்ளி மாணவர் தேர்வு

தமிழ்நாடு கால்பந்தாட்ட அணிக்கு காயல்பட்டினம் பள்ளி மாணவர் தேர்வு
X
தமிழ்நாடு கால்பந்தாட்ட அணிக்கு காயல்பட்டினம் பள்ளி மாணவர் தேர்வு
ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் தேசிய கால்பந்தாட்டப் போட்டியில் தமிழக அணி சார்பில் விளையாட காயல்பட்டினம், எல்.கே.மேல்நிலைப் பள்ளி மாணவர் தேர்வாகி உள்ளார். காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் எம்.எல்.ஹபீப் ரஹ்மான், ஏ.மஹ்மது ரிழ்வான் ஆகியோர் திருவண்ணாமலையில் செப்.17 ஆம் தேதி நடைபெற்ற 19 வயதுக்கு உள்பட்ட மாநில கால்பந்தாட்ட அணி தேர்வு போட்டியில் பங்கேற்று விளையாடினர். இதில், தமிழ்நாடு மாநில கால்பந்தாட்ட அணியில் சேர்ந்து விளையாட மாணவர் எம்.எல்.ஹபீப் ரஹ்மான் தேர்வாகி உள்ளார். இவர், அக். 6 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் கால்பந்தாட்டப் போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்று விளையாடுகிறார். இவரை பள்ளித் தலைவர், தாளாளர், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
Next Story