மாடியில் இருந்து மனைவியை தள்ளி விட்ட கணவர்

X
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி, ஆசாரி தெருவை சேர்ந்தவர் ஜினி ஜான் (31). அந்தப் பகுதியில் ஸ்டுடியோ வைத்துள்ளார். இவரது மனைவி ஆட்லின் ஜமீலா (29) பி எட் படித்து வருகிறார். இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்தின் போது 101 பவுன் நகைகள் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவ தினம் ஏற்பட்ட தகராறில் ஜெமிலாவை மாடியில் இருந்து ஜின் ஜான் தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசில் ஆட்லின் ஜெமிலா புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு இடையே ஜினி ஜான், அவரது தந்தை ஜான் ஜார்ஜ் (56), தாயார் ரெக்ஸிலின் ஜீவா (48) ஆகியோர் கூடுதலாக மேலும் ரூ. 3 லட்சம் வரதட்சனை கேட்டு ஆட்லின் ஜெமிலாவை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து சமூகநலத்துறை அதிகாரியிடம் புகாரளித்தார். இந்த புகாரை பரிசீலித்த சமூக நலத்துறை அலுவலர் ஜினி ஜான, அவரது தந்தை, தாயார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய குளச்சல் மகளிர் போலீசுக்கு அறிக்கை கொடுத்தனர். இதை அடுத்து மகளிர் போலீசார் மூன்று பேர் மீதும் வரதட்சணை கொடுமை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

